• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

- 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆகக்கூடிய முன்னுரிமை வழங்கும் பொருட்டு தங்களுடைய செயலாளர்களை ஈடுபடுத்துமாறு மாண்புமிகு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வேலைதிட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரின் சிரேட்ட ஆலோசகர் ஒருவர் தலைமைவகிக்கும் ஐந்து (05) அமைச்சுச் செயலாளர்களையும் மேலும் இரண்டு (02) நிபுணர்களையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.