• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் அழைப்பின் பேரில் மாண்புமிகு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் 2015 சனவரி மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்

- தனது விஜயத்தின் போது இந்தியாவின் பிரதம அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஶ்ரீமதி சோனியா காந்தி, முன்னாள் பிரதம அமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோகர்களுடன் இருநாடுகளினதும் பல்வேறு முக்கிய துறைகள் பற்றி கலந்துரையாடியதாக மாண்புமிகு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று இந்தியாவின் பிரதம அமைச்சர் இலங்கையின் சனாதிபதி அவர்களுக்கு அவருடைய வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் புதிய அரசாங்க அமைக்கப்பட்டவுடன் இருநாடுகளினதும் இருபக்க உறவுகள் மேலும் பலமடையச் செய்யும் புதிய அத்தியாயமொன்று ஆரம்பமாகின்றதெனவும் அவர் கூறியதாக மாண்புமிகு அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கை சனாதிபதி அவர்களை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றைச் செய்யுமாறு அழைப்பு விடுத்த இந்தியாவின் பிரதம அமைச்சர் அவரை உளமாற வரவேற்பதற்கு தயாராய் உள்ளதாகவும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றைச் செய்வதற்கு அவர் எதிர்பார்ப்பதாகவும் மாண்புமிகு அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இது 1987 இன் பின்னர் இந்தியாவின் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு செய்யப்படும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமொன்றாகும் எனவும் மாண்புமிகு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பின்வரும் துறைகள் தொடர்பில் இருபக்க கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தால்:

(i) தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு வரவழைத்தல்;
(ii) கொழும்பு - கண்டி புகையிரதப் பாதையை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்தல்;
(iii) பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்காக 4,000 ம் வீடுகளை நிருமாணித்தல்;

(iv) நேரடி விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலும் கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கும் இடையிலும் கப்பல் போக்குவரத்துச் சேவையை மீள ஆரம்பித்தல்;

(v) இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல்; அத்துடன்

(vi) இரு நாடுகளினதும் கடற்றொழிலாளர்கள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள்.