• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரட்டுவை அங்குலான நகர வீடமைப்புக் கருத்திட்டம் - கட்டம் I & மற்றும் கட்டம் II

- மொறட்டுவ மாநகர சபை எல்லைக்குட்பட்டு வசிக்கின்ற குறைந்த வருமானத்தைக் கொண்ட நகர மக்களையும் கடல் அரிப்புக் காரணத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களையும் மீளக் குடியமர்த்துவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 135 வீடமைப்பு அலகுகளை நிருமாணித்தும் கட்டம் II இன் கீழ் 153 வீடமைப்பு அலகுகளை நிருமாணித்தும் மாநகர குடியிருப்பு அதிகாரசபை பூர்த்தி செய்துள்ளது. கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தினதும் II ஆம் கட்டத்தினதும் நிருமாணிப்பு நடவடிக்கைகள் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது. மேலதிக வேலைப் பகுதிகளை உள்ளடக்கியதன் காரணத்தினால் இந்த 2 கருத்திட்டத்தின் 2 செலவு மதிப்பீடுகளையும் அதிகரிப்பதற்கு நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.