• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கைப்பணிச் சபையின் கீழ் பராம்பரிய கைப்பணிப் பிரிவில் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த படியை அதிகரித்தல்

- தேசிய கைப்பணி சபையினால் கைப்பணி கலைஞர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் பலப்படுத்துவதற்கு கைப்பணி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பிரதான கைப்பணி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டு தொடக்கமும் இதற்கு மேலதிகமாக கைப்பணி பயிற்சி நிலையங்கள் ஊடாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கிராமிய மட்டத்தின் கைப்பணி தொழிற்சாலைகளில் இருபது கைத்தொழில் துறைகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய தேசிய மரபுரிமையான கைப்பணியானது எமது நாட்டின் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துக் காட்டுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும். தேசிய கைப்பணி சபையின் கீழ் கைத்தொழில் துறையில் பயிற்சி பெறுகின்ற பயிலுநர்களுக்கு வழங்கப்படுகின்ற 500/= ரூபா மாதாந்த படியை 1000/= ரூபாவால் அதிகரிப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.