• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச இலங்கை அரசாங்க கணக்காய்வுச் சேவையை ஏனைய சேவைகளுக்குப் புறம்பான சிறப்புச் சேவையொன்றாகத் தாபிப்தற்காக அமைச்சரவையின் கொள்கை இசைவாக்கத்தைப் பெற்றுக் கொள்ளல்

- அரசியலமைப்பின் ஊடாக 154 ஆவது உறுப்புரையின் மூலம் கணக்காய்வாளர் அதிபதியின் பணிகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக அவரினால் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற கருத்திட்டங்கள் போன்றவற்றுக்கு உரியதாக நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் வருடாந்த கணக்காய்வுகளை மேற்கொண்டு உள்ள நிலைமையை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிட வேண்டியுள்ளது. கணக்காய்வாளர் அதிபதிக்குக் கையளிக்கப்பட்டுள்ள நியதிச்சட்ட கடமைகளின் பணிகளை நிறைவேற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை கணக்காய்வாளர் சேவையும் கணக்காய்வாளர் பரிசோதகர் சேவையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. பிரேரிக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்க கணக்காய்வாளர் சேவையை விசேட சேவையாக நிறுவுவதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.