• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி நகரக் கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான பம்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைமை முதலியவற்றை வடிவமைத்து நிருமாணித்தலும் கையாள்கை மற்றும் பராமரிப்பு உபகரணங்களை வழங்குவதற்குமான ஒப்பந்தத்தை ஒப்படைத்தல்

- இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமானது வீட்டு மற்றும் கைத்தொழில் கழிவு நீரை சேகரித்து பொறித்தொகுதி ஒன்றின் ஊடாக சுத்திகரிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கண்டி நகரத்தின் நீர் மூலவளங்கள் மகாவலி கங்கை மற்றும் கண்டி குளம் போன்றன மாசடைவதைத் தடுப்பதாகும். இந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தங்கள் நான்கு பொதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இது அதன் முதலாவது ஒப்பந்தப் பொதியாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.