• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாஹோ சந்தியில் புகையிரதக்கடவைக்கு குறுக்காக மேம்பாலமொன்றை நிருமாணித்தல்

- நிக்கவெரட்டிய - மொரகொல்லாகம - சியம்பலாகமுவ பாதை (B 326) மாகோ நகரத்தின் வடக்கு, வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணங் களிலிருந்து செல்லுகின்ற பிரதான புகையிரதப் பாதையூடாக செல்லுகின்றது. தொடர்ச்சியாக புகையிரதக் கடவை மூடுவதாலும் மாகோ நகரத்தில் நிலவுகின்ற நெரிசல் காரணமாக மேற்போந்த பாதையின் வாகனப் போக்குவரத்துக்கு நீண்ட தாமதம் ஏற்படுகின்றது. கொள்வனவு மேன்முறையீட்டுக்குழுவின் சிபாரிசின் பிரகாரம், மேற்போந்த நோக்கத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.