• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - பெரும்போகம் - 2014/2015

- நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் கமத்தொழில் திணைக்களத்தின் விடய நோக்கெல்லையின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் மூலம் உரக் கொள்வனவு செய்யப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் 2014‑09‑24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதனது கூட்டத்தின் போதான சிபாரிசின் பிரகாரம் 2014/15 பெரும்போகத்திற்கான உரக் கொள்வனவுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.