• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச தொடர்புகளுக்கும் திறமுறை ஆய்வுகளுக்குமான கொழும்பு கதிர்காமர் நிறுவனத்திற்கும் பீஜீங்கிலுள்ள சமகால சருவதேசத் தொடர்புகளுக்கான சீன நிறுவனங்களுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- சருவதேச தொடர்புகளுக்கும் திறமுறை ஆய்வுகளுக்குமான கொழும்பு கதிர்காமர் நிறுவனம் எனப்படுவது நடப்பு உள்நாட்டு மற்றும் உலகளாவிய கலந்துரையாடல்களின் மூலம் சருவசே உறவுகள் விடயப்பரப்பில் இலங்கையின் திறமுறைசார் நோக்கங்களை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு அர்ப்பணிப்பு செய்யப்பட்ட பல விடயங்களுடனும் அதனோடிணைந்த ஆராய்ச்சிகளைக் கொண்டதுமான ஒன்றியமாகும். தேசிய கொள்கையை வகுக்கும்போது பங்களிப்புச் செய்யும் நோக்கில் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கான ஒன்றியமாக இந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்கின்றது. இரு (02) நாடுகளுக்கு மிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.