• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹட்டன் - நுவரெலியா வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம்

- இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமானது இப்பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும் வாகன நெரிசல்களை இல்லாதொழிப்பதும் வீதிப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதும் ஹட்டனுக்கும் நுவரெலியாவுக்கும் இடையேயான வீதிப் பகுதியை புனரமைப்புச் செய்வதுமாகும் இதற்கமைவாக, 35.6 கி.மீ. தூரத்தைக் கொண்ட ஹட்டன் - நுவரெலியா வீதியை இரண்டு ஓடுபாதை வசதிகளுடன் விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்தக் கருத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.