• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுவட்ட அதிவேகப் பாதை நிருமாணிப்புக் கருத்திட்டம் - கட்டம் III

- 29.22 கி.மீ. மொத்த தூரத்தைக் கொண்ட சுற்றுவட்டப் பாதை கொட்டாவையில் ஆரம்பித்து கடுவெல, கடவத்தை ஊடாகச் சென்று கெரவெலப்பிட்டியவில் முடிவடைகின்றது. இது கொழும்பு நகரம் தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதை, கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை, வடக்கு அதிவேகப் பாதை மற்றும் ஏனைய பிரதான பாதைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இந்த நோக்கத்திற்கான நிதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.