• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியசட்டத்தை திருத்துதல் (உறுப்பினர்களுக்கு பங்கு இலாபங்களை வழங்குதலும் நிதியத்திற்கு சேவைக் கொள்வோரின் பங்களிப்பை அதிகரித்தலும் தொடர்பிலான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்)

- சுமார் ரில்லியன் ரூபா சொத்துக்கள் அடிப்படையில் ஊழியர் சேமலாப நிதியம் இலங்கை மத்திய வங்கியினால் முகாமைப்படுத்துவதுடன், அண்மையிலிருந்து இந்த சொத்துக்களின் 10 வீதத்தை மாத்திரம் வருமானங்களை ஈட்டுகின்ற வர்த்தக சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் சுமார் 10 பில்லியன் ரூபா அளவில் மூலதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கும் கூடுதலான செயற்பாட்டுக் கணக்குகளை பேணுகின்ற ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கிடையே பங்கு இலாபங்கள் பகிர்ந்து செல்வதற்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புக்கு அமைவாக சகல ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளத்திலிருந்து 22 வீத மீதி உரித்தானவாறு நிதியத்திற்கு வழங்குமாறு சேவை கொள்வோரின் பங்களிப்பு 14 வீதமாக 2 வீதத்தால் அதிகரிப்பதற்கும் கருதப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியசட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மாண்புமிகு காமினி லொக்குகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.