• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - பெரும்போகம் - 2014/2015

- நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உர வழங்குகையானது கையாளப்படுவது கமத்தொழில் அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி, வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷர் உரக் கம்பனி என்பவற்றினாலாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் 2014‑08‑29 மற்றும் 2014‑09‑03 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட அதன் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் பிரகாரம் 2014/2015 பெரும் போகத்திற்கான உரக் கொள்வனவின் பொருட்டு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.