• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்

- கல்வி பொதுத்தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் பல்கலைக்கழக நுழைவினை கிடைக்கப் பெறாத மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பின்வரும் உயர் தொழினுட்ப கல்வி நிறுவனங்களின் வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* தெஹிவளை உயர் தொழினுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் 04 மாடி கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்;

* கேகாலை உயர் தொழினுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் 04 மாடி கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்; அத்துடன்

* யாழ்ப்பாணம் உயர் தொழினுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் 04 மாடி கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்.