• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மரந்தஹமுல்ல அரிசி களஞ்சியசாலையுடன் இணைந்த அரிசி விற்பனை கூடத்தை நிருமாணித்தல்

- கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் மரந்தஹமுல்ல நகரத்திலும் அதன் சுற்றுப் புறத்திலும் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக அரிசி விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இது மேல் மாகாணத்தின் பாரிய அரிசி விற்பனை நிலையமாகவும் வியாபித்துள்ளது. 372.18 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் மரந்தஹமுல்ல, வெவேகொடல்லவத்தையில் அரிசி களஞ்சியசாலை தொகுதியொன்று ஏற்கனவே நிருமாணிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி கலைஞ்சியசாலை தொகுதி அருகாமையில் 115 அரிசி விற்பனை நிலையங்களை 115 மில்லியன் செலவில் புதிதாக நிருமாணிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்குரிய நிருமாணிப்பு வேலைகளை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.