• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியங்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பொதி II இற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

- 18,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட நிலக்கீழ் நீர்த்தாங்கியொன்றை நிருமாணிப்பதற்காக வக்க வீதியூடாக ஞாயிற்றுக் கிழமை சந்தை சந்தியிலிருந்து பிட்டும்பே வரை 08 கிலோ மீற்றர் நீளமான அன்னுப்பீட்டுக் குழாய் வழியொன்றையும் 10 கிலோ மீற்றர் நீளமான விநியோக குழாய் ஒன்றையும் வழங்கி பதிக்கும் பணிகள் இந்தக் கருத்திட்டத்தில் உள்ளடங்கும். இந்த விநியோக வழியின் மூலம் முக்கியமாக பாதுக்கை பிரதேச செயலகப் பிரிவிற்குரிய வக்க மேற்கு, பின்னவல தெற்கு, உக்கல்ல, பிட்டும்பே வடக்கு ஆகிய 04 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் பகுதிகள் தழுவப்படும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.