• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆறு வீதிகளை புனரப்புச் செய்தல்

- நாட்டில் மாகாணங்களை மாவட்டங்களையும் இணைக்கும் பின்வரும் வீதிப் பகுதிகள் புனரமைக்கப்படுவதற்கு இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமிய பிரதேசங்களுக்கு மிகச் சிறந்த பயண வசதிகள் கிடைக்கப் பெறுவதோடு, உள்நாட்டு மற்றும் சருவதேச வர்த்தக சந்தைகளுக்கு உற்பத்தி நிலையங்களின் தொடர்பும் விரிவுப்படுத்தப்படும்.

* அயகம - குக்குலேகம வீதி - கி.மீ. 16.89;
* திக்வெல்ல - ஜங்குள்ள - தல்பிட்டிகல வீதி - கி.மீ. 24.14;
* பலாங்கொடை - போவத்தை - கல்தொட்ட வீதி - கி.மீ. 28.96;
* நோர்வூட் - பொகவந்தலாவை - கம்பியன் வீதி - கி.மீ. 16.89;
* பஸ்ஸரை - ஹிங்குருகடுவ - பெலவத்தை வீதி - கி.மீ. 30.17; அத்துடன்
* பிளக்பூல் - அம்பேவெல - பட்டிபொல - ஹோட்டன்தென்ன வீதி - கி.மீ. 28.16.

அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.