• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு அதிவேகப் பாதை கருத்திட்டம் - இலக்கம் 2 தொடக்கம் 8 வரையிலான ஒப்பந்த பொதியின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்

- வடக்கு அதிவேகப் பாதை வேயாங்கொடையிலிருந்து கலேவெல வரையிலான பகுதியையும் இணை அதிவேகப் பாதையின் பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணிப்பதற்கான இலக்கம் 2 தொடக்கம் 8 வரையிலான ஒப்பந்த பொதியின் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகள் வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.