• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே கப்பற் றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழை ஏற்றுக் கொள்ளல் (Certficate of Recognition) தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- பயிற்சி அளித்தல், சான்றுப்படுத்துதல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கான தரங்கள் தொடர்பிலுள்ள 1978 ஆம் ஆண்டின் சருவதேச சமவாயத்திற்கு அமைவாக குறித்த நாட்டில் சமுத்திர நிருவாகத்தினால் ஒருவருக்கு வழங்கப்படும் சமுத்திரம்சார் சான்றிதழைக் கொண்டுள்ள கப்பலோடி ஒருவருக்கு ஏதேனும் நாடொன்றின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்காக இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதலொன்று குறித்த நாட்டிலிருந்து பெற்றுக் கொள்வது கட்டாயமானதாகும். 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வர்த்தக கப்பற் சட்டமும் இந்தத் தேவைக்கும் அதற்கமைவாகவும் இருக்க வேண்டியது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை ஏற்கனவே 28 நாடுகளுடன் உடன்படிக்கைகளைச் செய்துள்ளதோடு, இதனால் கப்பல் ஓடிகள் பெருமளவானோருக்கு வெளிநாட்டுக் கப்பல்களில் சேவைப் புரியும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கொரிய குடியரசினால் இந்த சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக இருபக்க உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு விருப்பினைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை கப்பலோடிகளுக்கு கொரிய குடியரசின் கொடியுடனான கப்பல்களிலும் அதேபோன்று கொரிய கப்பலோடிகளுக்கு இலங்கை கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பல்களில் சேவையாற்றுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இருநாடுகளுக்கும் இடையிலான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.