• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு அதிவேக பாதையை நீடிக்கும் கருத்திட்டத்தின் முதலாவது பகுதியை (மாத்தறையிலிருந்து பெலியத்தை வரை) நிருமாணிக்கும் கருத்திட்டம்

- 227 கி.மீற்றர் நீளம் கொண்ட தெற்கு அதிவேகப் பாதையை கொட்டாவையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை காலி மற்றும் மாத்தறை ஊடாகச் செல்லும். இதன் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கொழும்பு - கட்டுநாய்ககா அதிவேகப் பாதை உட்பட பிரேரிக்கப்பட்டுள்ள வடக்கு அதிவேகப் பாதையின் மூலம் தெற்கு மாகாணத்திலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள மஹிந்த ராஜபக்‌ஷ சருவதேச விமானநிலையம் போன்ற பிரதான பொருளாதார மத்திய நிலையங்களை கொழும்பு நகரத்துடனும் நாட்டின் வடக்குப் பிரதேசத்துடனும் இணைக்கப்படும். தெற்கு அதிவேகப் பாதை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 96 கிலோ .மீற்றர் நீளம் கொண்டுள்ளதோடு, அதன் 1 ஆம் பகுதி (மாத்தறையிலிருந்து பெலியத்த வரை 30 கிலோ மீற்றர்), 2 ஆம் பகுதி (பெலியத்தையிலிருந்து வெட்டிய வரை 26 கிலோ மீற்றர்), 3 ஆம் பகுதி (வெட்டியவிலிருந்து அந்தரவெவ வரை 15 கிலோ மீற்றர்) , 4 ஆம் பகுதி (அந்தரவெவ ஊடாக மத்தளயிருந்து ஹம்பாந்தோட்டை வரை 25 கிலோ மீற்றர்) ஆக நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மாத்தறையிலிருந்து பெலியத்த வரை 30 கிலோ மீற்றர் நீளமான 1 ஆம் பகுதியை நிருமாணிப்பதற்கான கடன் உடன்பாட்டிற்குரிய பணிகளைச் செய்வதற்காக. நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.