• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கும் சீனாவின் பீஜிங் வெளிநாட்டு கல்வி பல்கலைக் கழகத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்கு உரியதாக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல்

- முக்கியமாக பின்வரும் நோக்கங்களைத் தழுவி, இரு நாடுகளுக்கிடையிலும் கைச்சாத்திடப்பட்ட மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்குரிய பணிகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* இலங்கை மாணவர்களுக்கு சீனமொழி தொடர்பிலான கல்வியினை வழங்குதல்; அத்துடன்

* சீன மாணவர்களுக்கு சிங்களமொழி தொடர்பிலான கல்வியினை வழங்குதலும் சீனாவின் பீஜிங் வெளிநாட்டுக் கல்வி பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கல்விப் பிரிவொன்றை தாபித்தலும்.