• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத்தொடரிலும் கலந்து கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி ஐக்கிய அமெரிக்க குடியரசின் நியூயோர்க் நகருக்கு மேற்கொண்ட விஜயம் - 2014 செப்ரெம்பர்

- 2014 செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை நியூயோர்க்கில் நடாத்தப்பட்ட 2014 ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத்தொடரிலும் கலந்துகொண்ட இலங்கை பிரதிநிதிகள் குழு அதிமேதகைய சனாதிபதியினால் வழிநடத்தப்பட்டது. உலகத் தலைவர்கள் அடங்கலாக அரசாங்க தலைவர்கள் 100 பேர்கள், வர்த்தகம், நிதி, சிவில் சமூக தலைவர்கள் 800 பேர்கள் வரை கலந்துகொண்ட இந்த மாநாட்டின் நோக்கமாவது 2015 பாரீஸ் நகரத்தில் பயனுள்ள உலகளாவிய காலநிலை உடன்பாடொன்றுக்கான அரசியல் உடன்பாட்டினை ஏற்படுத்துதல், காபன் வெளியேற்றத்தை குறைக்கும் பொருட்டு சகல நாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஊக்குவித்தல், காலநிலை மாற்றங்களின் பிரதிகூலமான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமையை கட்டியெழுப்புதல் போன்றவையாகும். இந்தக் காலநிலை மாநாட்டில் அதிதேகைய சானாதிபதி அவர்கள் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்ககைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டதோடு, கடந்த 8 வருட காலப்பகுதிக்குள் தனியாள் வருமானத்தை மூன்று மடங்காக்குவதற்கு இலங்கை வெற்றிக் கண்டுள்ளதெனவும், நாட்டின் ஆள் ஒருவருக்கான காபன் வெளியேற்றம் இதுவரை மெற்றிக்தொன் ஒன்றுக்கு குறைவாக நிலவுகின்றதெனவும் குறிப்பிட்டார். அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து கலந்துகொண்டோர்களுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, இந்த கலந்துரையாடல்களின் போது பிரச்சினையான சூழ்நிலையின் பின்னர் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறியும் போது இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம், தற்போதைய பொருளாதார எழுச்சியில் வர்த்தகம் மற்றும் முதலீடு என்பவற்றுக்காகவுள்ள வசதிகள், ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை முறையுடனும் அதேபோன்று மனித உரிமைகள் அமைப்பு மற்றும் அதுசார்ந்த பணிகளின் போது இலங்கையின் தொடர்ச்சியான பங்குபற்றுதல் என்பனவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் வலியுறுத்தப்பட்டது. அதிமேதகைய சனாதிபதி அவர்களுடன் இந்த சுற்றுலாவில் இணைந்திருந்த வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் இந்தத் தகவல்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டதோடு, அவர்களும்கூட இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களில் பயனுள்ள வகையில் கலந்துரையாடினார். சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.