• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெஸ்பாவ நகரசபை அதிகார எல்லைக்குள் 2014 ஆம் ஆண்டில் பிரேரிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்

- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கெஸ்பாவ நகரத்தை "நகர அபிவிருத்தி பிரதேசம்" ஆக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, அதற்கமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டமொன்றின் மூலம் நகரத்தின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்காக அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பல இனங்காணப்பட்டுள்ளன. "பிலியந்தல நகர மைய அபிவிருத்திக் கருத்திட்டம்" அத்தகைய பிரதான கருத்திட்டமொன்றாகும். இதனைவிட. கெஸ்பாவ நகர பிரதேசத்தின் சமூக தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் கருத்திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கண்டறியப்பட்டுள்ளன.

* பிலியந்தல நகரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்காக வர்த்தகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்;
* இரத்தமல்தெனிய சிறுவர் மற்றும் பெண்கள் சிகிச்சைக் கட்டடமொன்றை நிருமாணித்தல்;
* தொலேகனத்த மயான மீள் அபிவிருத்தி; அத்துடன்
* சோமவீர சந்ரசிறி விளையாட்டு மைதானத்தில் நடைபாதையொன்றை நிருமாணித்தல்.

மேற்போந்த கருத்திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.