• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சக்தி (மின்சாரம்) ஒத்துழைப்புக்கான சார்க் கட்டமைப்பு உடன்படிக்கை

- இந்திய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மேற்போந்த உடன்படிக்கை 2014 ஒக்ரோபர் 17 ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லி நகரத்தில் நடாத்தப்பட்ட தெற்காசிய வலய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சக்தி அமைச்சர்களின் 5 ஆவது கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் நடாத்தப்படும் சார்க் மாநாட்டில் கைச்சாத்திடப்படவுள்ள இந்த வரைவு உடன்படிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றினதும் அரசாங்கங்களின் அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது. இயைபுள்ள உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கும் ஒழுங்கு விதிகளுக்கும் உட்பட்டு, பரஸ்பர உடன்பாடு மற்றும் தன்னார்வ அடிப்படையில் நாட்டு எல்லைகளுக்கு ஊடாக செய்யப்படும் சக்தி வர்த்தகத்திற்கு இடமளிப்பது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். உத்தேச உடன்படிக்கையானது நாட்டினதும் அபோன்று தெற்காசிய வலயத்தினதும் சக்தி பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான பயனுள்ள கருவியாக அமையும். மேற்போந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதற்குரிய பணிகளை நடாத்திச் செல்லும் பொருட்டும் மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.