• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு அதிவேக பாதைக் கருத்திட்டம் - ஒப்பந்த பொதி 02 தொடக்கம் 06 வரை உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குதல்

- வடக்கு அதிவேகப் பாதையின் எந்டேறமுல்லையிலிருந்து கலேவெல வரையிலான பகுதியையும் இணைப்பு அதிவேக பாதையின் பொத்துஹரையிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் அதியுயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வடக்கு அதிவேகப் பாதையின் வெயாங்கொடையிலிருந்து கலேவெல வரையிலான நிருமாணிப்பு சம்பந்தமான பின்வரும் ஒப்பந்த பொதிகள் 02 தொடக்கம் 06 வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள்,கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* பொதி 02 - வேயங்கொட - மீரிகம (கி.மீ.16.0);
* பொதி 03 - மீரிகம - நாக்கலகமுவ (கி.மீ.18.0);
* பொதி 04 - நாக்கலகமுவ - அலகொலதெனிய (கி.மீ.20.1);
* பொதி 05 - அலகொலதெனிய - மெத்தேகட்டிய (கி.மீ.16.9); அத்துடன்
* பொதி 06 - மெத்தேகட்டிய - கலேவெல (கி.மீ.19.0)