• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய டொலர் கடன் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் - ஓமந்தை இடையேயான புகையிரத பாதை புனரமைப்பு

- வடக்கு புகையிரத பாதையினதும் தலைமன்னார் புகையிரத பாதையினதும் மீள் நிருமாணிப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஒமந்தையிலிருந்து பளை வரையும் மதவாச்சியிலிருந்து மடு வரையிலான புகையிரத பாதை பகுதிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் வரையிலான மீதிப் பகுதியானது இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது. மேற்போந்த பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் காங்கேசன்துறைக்கும் ஓமந்தைக்கும் இடையேயும் தலைமன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையேயும் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் ஆகக்கூடிய வேகத்தில் புகையிரம் செல்லமுடியும். மேற்போந்த கடன் திட்டத்தின் கீழான மீதி நிதிகளைப் பயன்படுத்தி அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையேயான 62 கிலோ மீற்றர் நீளமான புகையிரதப் பாதை புனரமைக்கப்படவுள்ளது. இந்திய கம்பனியினால் முன்வைக்கப்பட்டுள்ள தொழினுட்ப / நிதி பிரேரிப்புகள் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றின் ஒத்தாசையுடன் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவினால் மதிப்பிடும் பொருட்டு போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.