• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரியம் சாராத புதுப்பிக்கத்தக்க சக்தியை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தும் பொருட்டு தேசிய மின்வலு முறைமையை விரிவாக்கும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டம்

- சிறிய அளவிலான மின்சார உற்பத்தி துறை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் நாட்டில் மின்சார உற்பத்திக்கு பயனுள்ள வகையில் பங்களிப்பு நல்கியுள்ளதோடு, 2020 ஆம் ஆண்டளவில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் சக்தித் தேவையின் 20 சதவீதத்தை பிறப்பிப்பதை இலக்காகக் கொண்டு, வளி, சூரிய சக்தி, உயிரின தோற்றுவாய்களைப் பயன்படுத்த வேண்டுமென்பதோடு, அதுசார்ந்த அபிவிருத்தி பணிகளைத் துரிதப் படுத்தலும் வேண்டும். மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி சம்பந்தமாகவுள்ள நோக்கங்களை அடையும் பொருட்டு சிபாரிசுகளைச் சமர்ப்பிப்தற்காக இரணடு அமைச்சுகளினதும் செயலாளர்களினால் கூட்டாக தலைமை வகிக்கப்படும். அத்துடன், இயைபுள்ள உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினாலும் மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.