• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல் - கூறு பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பிலான வங்காள விரிகுடா முன்முயற்சி சார்ந்த நாடுகளின் சுதந்திர வர்த்தக வலயத்தை (BIMSTEC FTA) நடைமுறைப்படுத்துதல்

- பல் - கூறு பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பிலான வங்காள விரிகுடா முன்முயற்சியில் பங்காளதேஷ், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியன்மார், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளதோடு இந்த வலய முன்முயற்சியின் பிரதான நோக்கமாவது வர்த்தகம், முதலீடு, தொழினுட்பம், போக்குவரத்து, தொலைத் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, கடற்றொழில், மின்வலு சக்தி, கமத்தொழில், மனிதவள அபிவிருத்தி ஆகிய முன்னுரிமை துறைகள் எட்டு (08) தொடர்பில் ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் உறுப்புரிமை நாடுகளின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை பலப்படுத்துவதாகும். தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இதன் மூலம் பேணப்படும். அரசாங்க துறைசார்ந்த உரிய அதிகார பீடங்களுடன் உசாவுதலைச் செய்து வகுத்தமைக்கப்பட்டுள்ள பல் - கூறு பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பிலான வங்காள விரிகுடா முன்முயற்சி சார்ந்த நாடுகளின் சுதந்திர வர்த்தக வலயம் (BIMSTEC FTA) என்பதன் கீழ் இலங்கையின் இசைவாக்கத்தினை உறுதி செய்யும் பொருட்டு கைத்தொழில், வர்த்தக அலுவல் கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.