• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கிராமிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்

- பின்வரும் கருத் திட்டங்களுக் குரியதான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* ஆனையிறவு உப்பளத்தை புனரமைத்தலும் மீளச் செயற்படுத்துதலும் - வருடமொன்றுக்கு 20,000 மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ள உப்பு உற்பத்தியை அடையும் பொருட்டு கட்டம் I ஆக 330 ஏக்கர் கொண்ட உப்பள பிரதேசத்தை புனரமைப்புச் செய்து மீளச் செயற்படுத்தும் பொருட்டு "வடக்கின் வசந்தம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2014 ஆம் ஆண்டில் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதோடு, கடல் நீர் தடாகம், ஆவியாக்கப்படும் குளங்கள், கட்டியாக்கும் குளங்கள், உப்பு மேடைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பு செய்வதற்கான அபிவிருத்தி பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வருடமொன்றுக்கு மேலும் 25,000 - 30,000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யும் பொருட்டு கட்டம் IIஆக 2015 ஆம் ஆண்டு 447 ஏக்கர் புனரமைப்புச் செய்து மீளச் செயற் படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஆரம் பிக்கப்படவுள்ள கட்டம் II இற்கான மதிப்பிடப்பட்ட செலவினம் 125 மில்லியன் ரூபாவாகும்; அத்துடன்

* மீன் உற்பத்தியை பலப்படுத்துதலும் அதற்கான ஒத்தாசை நல்கும் பொருட்டு வீரவில மற்றும் லுணுவிலவில் உள்ள மீன் வலை தொழிற்சாலைகளைப் பலப்படுத்துதல் - ஏற்கனவேயுள்ள வீரவில மீன் வலை தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் வருடமொன்றுக்கு 120 மெற்றிக் தொன் ஆகுமென்பதுடன், லுணுவில தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் வருடமொன்றுக்கு 180 மெற்றிக் தொன் ஆகும். 2015 ஆம் ஆண்டு இந்த இரண்டு தொழிற்சாலைகளும் 99.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் நவீனமயப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது.