• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜேர்மன் அரசாங்கத்தின் 6 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொழினுட்ப உதவியைப் பெற்றுக் கொள்ளல்

- இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொழில்பயிற்சி நிலையங்களை தாபிப்பதற்காகவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்குமான இரண்டு (02) கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஜேர்மன் பெடரல் குடியரசு அரசாங்கத்தின் உதவியின் கீழ் 4 மில்லியன் யூரோக்களும் 5.5 மில்லியன் யூரோக்களும் மானியமாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த கருத்திட்டங்களின் நிகழ்கால பணிகளை பூர்த்தி செய்வதற்காகவும் மேலதிக செயற்பாடுகளுக்காக நிதியிடுவதற்காகவும் 6 மில்லியன் யூரோக்களைக் கொண்ட தொழினுட்ப உதவியைப் வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்கான பரிமாற்றப் பத்திரங்களை கைச்சாத்திடும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.