• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
4 நெய்யரி உப நிலையங்கள் மற்றும் அதற்குரிய அனுப்பீட்டு வழிகளை நிருமாணிக்கும் கருத்திட்டமும் பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமும்

- அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதார நடவடிக்கைகளின் கேள்விகளுக்கு ஏற்றவாறு சக்தி துறையின் இயலளவு விரிவுபடுத்த வேண்டுமென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, இலங்கை மின்சார சபை பின்வரும் 2 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது.

* 4 நெய்யரி உப நிலையங்கள் மற்றும் அதற்குரிய அனுப்பீட்டு வழிகளை நிருமாணிக்கும் கருத்திட்டம் - இந்தக் கருத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தின் நாவலப்பிட்டிய, ராகலை, வேவெல்வத்த, மாலிம்கொட ஆகிய இடங்களில் 38 மில்லியன் யூரோக்களைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் 4 நெய்யரி உப நிலையங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன. இந்த 4 நெய்யரி உப நிலையங்களின் ஊடாக 220 மெகாவொட் கொண்ட மேலதிக ஆற்றலானது தேசிய முறைமையுடன் சேர்க்கப்படும்.

* பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் பிரான்ஸ் முகவராண்மை ஒன்றினதும் நிதி உதவியின் மீது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் கெஸ்பாவ, களுத்துறை, பழைய அநுராதபுரம் ஆகிய இடங்களில் 3 நெய்யரி உப நிலையங்கள் நிருமாணிப்பதற்கும் புனரமைப்பதற்குமாக 22 மில்லியன் யூரோக்களைக் கொண்ட கடன் தொகையொன்று வழங்கப்படவுள்ளது.

இந்த கடன் உடன்படிக்கைகளுக்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.