• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருவண்புர அதிவேக பாதைக் கருத்திட்டம் - சாத்தியத் தகவாய்வு, சுற்றாடல் தாக்க மதிப்பீடு போன்றவற்றைச் செய்வதற்கான மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

- உத்தேச ருவண்புர அதிவேக பாதையின் கஹத்துடுவ இடைமாற்றல் பகுதியிலிருந்து ஆரம்பித்து பல்மடுலையில் (பல்மடுல்ல - எம்பிலிபிட்டிய - நோனாகம வீதியின் மூன்றாவது கிலோ மீற்றரில்) முடிவடைவதோடு இந்த வீதியின் மொத்த நீளம் 71 கிலோ மீற்றர்களாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.