• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் யப்பானின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான 240 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 200 மில்லியன்) மானியம்

- இலங்கை மக்களின் சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டு நிலைமையை மேம்படுத்தும் பொருட்டு யப்பான் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 2014/2015 நிதி ஆண்டில் கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் 200 மில்லியன் யப்பான் யென்கள் (அண்ணளவாக 240 மில்லியன் ரூபா) மானியமொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சுக்காக கொள்வளனவு செய்யப்படும் உபகரணங்கள் இந்த அமைச்சின் கீழுள்ள தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாகாண வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகள் உட்பட மருத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சுக்காக கொள்வனவு செய்யப்படும் உபகரணங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கீழ் நீர்வள அபிவிருத்தியின் பொருட்டு இந்த அமைச்சின் கீழுள்ள கிராமிய மட்டத்திலான நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இந்த நோக்கத்தின் பொருட்டு யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றப் பத்திரங்களை கைச்சாத்திடுவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.