• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பல் மேற்பார்வை முறைமையைத் தாபித்தல்

- நாட்டில் கடற்றொழில் துறையின் நிலைபேறுடைய முகாமைத்துவத்திற்கு புதிய தொழினுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென்பது அவதானிக்கப்பட்டுள்ளதோடு, கப்பல் மேற்பார்வை முறைமை பற்றிய உலகளாவிய நோக்கத்தினை செயற்படுத்துவது கட்டாய விடயமொன்றாக மாறியுள்ளது. கப்பல் மேற்பார்வை முறைமையின் விடயநோக்கெல்லையாவது மீன்பிடிக் கப்பல்களுக்கு கப்பல் மேற்பார்வை முறைமை இயந்திரங்கள், 3,000 வானொலி இயந்திரங்கள் வழங்குதல், மீன்பிடிக் கப்பல்கள் இருக்குமிடத்தை செய்மதி ஊடாக அவதானிக்கும் பொருட்டு கப்பல் அவதானிப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல் உட்பட 10 வருட காலத்திற்கு உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் மென்பொருள் உதவி, பராமரிப்பு முதலியவற்றை வழங்குதல் ஆகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கப்பல் மேற்பார்வை முறைமைமையத் தாபிப்பதற்கும் தொடர்புபட்ட விடயங்களை நடாத்திச் செல்வதற்காகவும் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.