• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு அதிவேக வீதி கருத்திட்டம் - 07 ஆம் பொதி சார்பில் இணைக்கப்படும் அதிவேக வீதியின் பொத்துஹெரயிலிருந்து றம்புக்கனை வரை (கி.மீ.14) நிருமாணித்தலும் றம்புக்கனை மற்றும் பொத்துஹர இடமாற்றல் நிலையங்கள் அடங்கலாக 07 ஆம் பொதியின் 3.5 கிலோ மீற்றர்களை நிருமாணித்தலும்

- வடக்கு அதிவேக வீதியின் என்டேறமுல்லையிலிருந்து கலேவெல பகுதியையும் இணைக்கப்படும் அதிவேக வீதியின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 07 ஆம் ஒப்பந்த பொதியை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.