• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளைப் புனரமைப்பதற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3 இன் கீழ் புனரமைக்கப்படவுள்ள வீதி பட்டியல்

- இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் புனரமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ள வீதிகளின் மொத்த நீளம் 612.65 கிலோ மீற்றர்களாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இயைபுள்ள பணிகளை நடாத்திச் செல்வதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.