• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் பொது சந்தையின் மீள் அபிவிருத்தி

- அநுராதபுரம் நகரம் வடமத்திய மாகாணத்தின் பிரதான வர்த்தக நகரமாகவும் அதேபோன்று நிருவாக நகரமுமாகும். நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அநுராதபுரம் நகர அபிவிருத்தித் திட்டம் வகுத்தமைக்கப்பட்டுள்ளதோடு, இந்த திட்டத்தின் கீழ் அநுராதபுரம் பொது சந்தை அநுராதபுரம் மாநகர சபைக்குச் சொந்தமான சுமார் 1.19 ஹெட்டயார் விஸ்தீரணமான காணியில் அபிவிருத்தி செய்வதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.