• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பதுளை, ஹாலி-எல புலம்பெயர் வள நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

- இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் வள நிலையத்தை பதுளை, ஹாலி-எலவில் நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.