• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய மருத்துவ மனையின் பண்டாரநாயக்கா கட்டடத்தை பழுது பார்த்தல்

- இலங்கை மக்களுக்கு நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை உயர்மட்டத்தில் வழங்கும் இலங்கை தேசிய மருத்துவமனை, 2014 ஆம் ஆண்டு அதனது 150வது வருடப்பூர்த்தியை கொண்டாடியது. தேசிய மருத்துவமனை கட்டடங்களுக்கிடையே பண்டாரநாயக்க கட்டடம் பிரதான கட்டடத் தொகுதியாகு மென்பதுடன், அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சைக் கூடம், நரம்பு அறுசைச் சிகிச்சைப் பிரிவு, கதிர்வீச்சுப் பிரிவு, தொண்டை, கழுத்து, காது, பிரிவு, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைப் பிரிவு போன்ற பல பிரிவுகளுக்கு இதன் மூலம் இடவசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. பண்டாரநாயக்க கட்டடத்தை பழுதுபார்க்கும் கருத்திட்டத்தின் ஒப்பந்தம் 190,236,982.37 ரூபா செலவினத்தில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.