• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உற்பத்தி வள அமைப்பின் உறுப்பாண்மையைக் கொண்டுள்ள நாடுகளின் தேசிய உற்பத்தி வள அமைப்பு தலைவர்களின் 55 வது வருடாந்த கூட்டத்தொடரை இலங்கையில் நடாத்துதல்

- யப்பானை மையமாகக் கொண்டு தாபிக்கப்பட்டுள்ள ஆசிய உற்பத்திவள அமைப்பு (Asian Productivity Organization) சருவதேச அமைப்பாக இதன் உறுப்பாண்மை நாடுகளின் தொழிற் சாலைகளில் பல்வேறுபட்ட துறைகளுடன் கமத்தொழில் துறையையும் மேம்படுத்துவதற்கு வசதிகளை வழங்குகின்றது. 19 வது ஆசிய பசுபிக் வலய நாடுகள் இந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன. தேசிய உற்பத்திவள அமைப்பு தலைவர்களின் 55வது வருடாந்த கூட்டத்தொடர் 2014 ஒக்றோபர் 21 தொடக்கம் 23 வரை இலங்கையில் நடாத்தப்படவுள்ளது. உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு பஷீர் சேகுதாவுத் அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.