• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1942 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க தேசிய நூதனசாலை கட்டளைச் சட்டத்தை திருத்தி இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு இசைவான புதிய சட்டமொன்றை வகுத்தல்

- 1942 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க தேசிய நூதனசாலை கட்டளைச் சட்டத்தை திருத்தி நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைப்பாடுகளுக்கு ஒத்துப்போகக் கூடியவாறு சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவைக் குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக சட்டவரையுநரினால் சட்டமூலமாக்கப்பட்ட தேசிய நூதனசாலை கட்டளைச் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இதன் பின்னர், இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) ஜகத் பாலசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.