• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான அனர்த்தங்களின் போது சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவை - இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும், இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான முன்னேற்பாடுகள்

- சருவதேச சிவில் விமானசேவை சமவாயத்துக்கு (சிக்காகோ சமவாயம் - 1944) தரப்பினர் ஒருவராக இந்த சமவாயத்தில் உள்ளடக்கப்பட்ட சருவதேச தரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை ஒழுங்குகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை களுக்கு ஆயத்தமாயிருத்தல் இலங்கை தரப்பினால் நிறைவேற்ற வேண்டியதான கடப்பாடாகும். சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவை தேவைப் படுமிடத்து ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்விலான ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவையை வழங்கும் பொருட்டிலான ஆற்றலை வலுப்படுத்துவதற்கு எல்லா நாடுகளினாலும் அருகாமையிலுள்ள நாடுகளுடன் இணக்கப்பாடுகளை எய்துகொள்ளும் தேவைப்பாடாகும். நாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற ஆகாய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் நடாத்தப்பட்ட சருவதேச ஆய்வுக்கு (USOAP-2013) அமைவாக உலகிலேயே 191 நாடுகளுக்கிடையே இலங்கை 19 இடத்தைப் பெற்றுள்ளதுடன், 34 ஆசிய பசுபிக் வலய நாடுகளுக்கிடையே நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. மாலைதீவு அதிகாரபீடங்களின் கோரிக்கையின் பேரிலான வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் மாறுபடாதவாறு ஆரம்ப ஆவணத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.