• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் அகன்ற உருவமைப்பைக் கொண்ட விமானத்தொகுதியை மாற்றீடு செய்தல்

- ஶ்ரீ லங்கன் விமான சேவை, முதல் ஒன்பது விமானங்களுக்கு நிதியளித்தல் உட்பட அகன்ற உருவமைப்பைக் கொண்ட விமானத் தொகுதியை மாற்றீடு செய்யும் திட்டம் பூர்த்தி செய்துள்ளமை பற்றி சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதுடன் இதன் விபரங்கள் பின்வருமாறு

* Rolls Royce Trent 700 இயந்திரங்களினால் செயல்வலுப்படுத்தப்படுகின்ற A 330 - 300 ஆறு (06) விமானங்கள் 2014 ஆம் ஆண்டு இறுதிக் காலாண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்வதற்கும்; அத்துடன்

* A 330 - 200 விமானங்களுக்குப் பதிலாக பயன்படுத்தும் பொருட்டு A 350 - 900 மேலதிக மூன்று (03) விமானங்கள் 2017 ஆம் ஆண்டு குத்தகை முறையில் பெற்றுக் கொள்வதற்கும்.

இதற்கமைவாக முதலாவது புதிய ரக A 330 - 300 எயார் பஸ் விமானம் 2014 ஒக்றோபர் மாத இறுதி வாரத்தில் கிடைக்கப்பெறவுள்ளது.