• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிஓயா மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆடைத் தொழிற்சாலைகளையும் அது சார்ந்த தொழில்களையும் ஊக்குவித்தல்

- வெலிஓயா பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை புடவை மற்றும் ஆடைத் தொழிற்சாலையும் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களின் வர்த்தக சபையும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் ஊடாக வவுனியா அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள எல்லைக் கிராமங்களில் ஆடைத் தொழில்துறையில் தொழில்புரிவதற்கு விருப்பத்தை தெரிவிக்கின்ற 2,500 இற்கு அதிகமானோர் உள்ளனர் எனவும் அவர்களில் 500 பேர் மாத்திரம் வேறு பிரதேசங்களிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதன் ஊடாக அதுசார்ந்த திறன்கள் ஏற்கனவே எய்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தப் பிரதேசங்களில் ஆடைத் தொழிற்சாலைகளை நிருமாணிப்பதன் ஊடாக கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைமைகளின் பின்னர், அரசாங்கத்தினால் இந்தப் பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுமென கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. வெலிஒயா பிரதேச செயலகப் பிரிவில் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குரிய 50 ஏக்கர் அளவிலான காணியை ஆடை மற்றும் அதுசார்ந்த கைத்தொழிற்சாலைகளை மேம்படுத்தும் பொருட்டிலான 5 கருத்திட்டங்களும் முசலி பிரதேச செயலகப் பிரிவில் கல்லாறு கிராமத்தில் கொண்டாச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 25 ஏக்கர் அரசாங்க காணியில் மேலும் 5 கருத்திட்டங்களை தாபிப்பதற்கும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.