• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆகஸ்ட் மாதம் 22 தொடக்கம் 24 வரை கண்டியில் நடாத்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் நீர்ச் சேவை தொடர்பிலான 3 ஆவது சர்வதேச மாநாடு

- 2014 ஆகஸ்ட் மாதம் 22 தொடக்கம் 24 வரை பொதுமக்கள் மற்றும் நீர்ச் சேவை தொடர்பிலான 3 ஆவது சர்வதேச மாநாடு கண்டியில் நடாத்தப் பட்டதுடன், இந்த ஆண்டிற்கான மாநாட்டின் தொனிப்பொருள் "நீர், சமூக அபிவிருத்தி மற்றும் சுபீட்சம்" என்பதாகும். இந்த மாநாட்டுக்கு 475 சமூகஞ்சார் நீர் அமைப்புக்களிலிருந்து உள்ளூர் முகவர்கள் உட்பட அண்ணளவாக 750 பேர் இதில் கலந்துகொண்டனர். “செங்கடகல பிரகடனம், இலங்கை", இந்த மாநாட்டின் பிரகடனப்படுத்தப்பட்டது. யுனிசெப் மற்றும் சருவதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் நம்பிக்கைப் பொறுப்பு, இலங்கை மழைநீரீனால் அறுவடை செய்யும் ஒன்றியம். என்பவற்றுடன் சேர்ந்து நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சினால் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.