• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் மீதான பிரேரிப்பு

- நிதி முறைமையின் நிலையான தன்மையையும் நிதித்துறையின் அபிவிருத்தியை மேம்படுத்தும் பொருட்டும் நிதித்துறையின் ஒழுங்குறுத்துகையாளர்களினால் கூட்டாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை இனங்காணும் நோக்கில் ஒழுங்குறுத்துகைக்கு இடையேயான நிறுவன சபையொன்றை தாபிக்கும் உரிமப்பத்திர வங்கிகள், உரிமப்பத்திர நிதிக் கம்பனிகள், குத்தகை கம்பனிகள் நிதித் தரகர்கள், ஆரம்ப சந்தைப்படுத்துநர்கள், காப்புறுதிக் கம்பனிகள், காப்புறுதி தரகர்கள், காப்புறுதி முகவர்கள், நட்ட சீராக்குநர்கள், நிறுவன முகவர்கள், பங்குச் சந்தை மற்றும் பங்குத் தரகர்கள் / சந்தைப்படுத்துநர்கள் "நிதி நிறுவனங்கள்" என்பதில் உள்ளடக்கப்படும். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இயைபுள்ள நோக்கத்திற்காக சட்டத்தை ஆக்குவதற்கும் குறித்த நோக்கத்திற்காக சட்டமூலங்களை வரைவதற்கும் சட்டவரைநரை அறிவுறுத்துவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.