• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பிரதேசங்களுக்கு 80 சிறிய வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வசுவண்டியொன்றின் விலை 3,600,000.00/- ரூபாவைக் கொண்டதான 35 ஆசனங்களைக் கொண்ட அசோக் லேலன்ட் லின்க்ஸ் 80 இரட்டைக் கதவு வசு வண்டிகளை 288.0 மில்லியன் ரூபா மொத்தத் தொகைக்கு வழங்கும் பொருட்டு இந்த ஒப்பந்தத்தை லங்கா அசோக் லேலன்ட் PLC கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம .அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.