• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை பொது வைத்தியசாலையையும் வெலிகந்த தள வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்தல்

- பொலன்நறுவை மற்றும் வெலிகந்த மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பின்வரும் நிருமாணிப்பு கருத்திட்டங்களுக்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன் நிருமாணிப்பு பணிகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடம் (CECB) வழங்குவதற்கும் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பொலன்நறுவை பெரிய மருத்துவமனை

* வெளிநோயாளிகளுக்கான வசதிகளுடன் தங்கியிருப்பதற்கான அறை 42,607,099.55/- ரூபா செலவினத்தில் நிருமாணித்தல்;

* 199,527,717.76/- ரூபா செலவினத்தில் நிபுணத்துவ மருத்துவர்களுக்கும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்குமான புதிய உத்தியோகபூர்வ விடுதி நிருமாணிப்பு; அத்துடன்

* ஏற்கனவேயுள்ள மருத்துவ உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ விடுதியை 37,132,813.18/- ரூபா செலவினத்தில் நவீனமயப்படுத்துதல்;

வெலிகந்த மாவட்ட மருத்துவமனை

* வெளிநோயாளிகளுக்கான வசதிகளுடன் தங்கியிருப்பதற்கான அறை 18,682,176.45/- ரூபா செலவினத்தில் நிருமாணித்தல்.