• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜின் - நில்வலா திசை திருப்பல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்"

- நீண்டகால மதியுரை செயற்பாட்டிற்கு பின்னரும் பிரதேசத்தின் பாதிப்புக்கு ஆளாகின்றவர்களின் அளவினை குறைத்துக் கொண்டு திட்டமிடப்ட்ட மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.

* மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, அததுரலிய, வெலிகம, முலட்டியன, மாலிம்பட, திஹகொட, திக்வெல்ல மற்றும் கிரிந்த புஹூல்வெல பிரதேச செயலக பிரிவுகளுக்கு குடிநீர் வழங்குல்;

* அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன, ஒக்காவல, பெலியத்த, அங்குனுகொலபெலஸ்ஸ, சூரியவெவ, அம்பாந்தோட்டை நகரம் மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குல்;

* பெரும்பாக அம்பாந்தோட்டை பிரதேசத்தின் கைத்தொழில் மற்றும் வர்த்தக கமத்தொழிலுக்கான நீர் வழங்குல்;

* அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவேயுள்ள பயிர்செய்யப்படும் காணிகளுக்கு பெரும்போகம் சிறுபோகம் இருபோகங்களுக்கும் நீரை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்தலும் புதிய 8,500 ஏக்கர் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்கலும்; அத்துடன்

* அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலத்திற்கு அடியிலான நீர்மட்டம் மேல் எழும்புவதன் காரணத்தினால் கமத்தொழில் உற்பத்தி திறனையும் சிறந்த சுற்றாடல் நன்மைகளையும் அதிகரித்தல்.

இதனோடுசார்ந்த விடயங்களுக்கான தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.