• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கற்பதற்கான நுழைவுசார் விருது - 2014 - இலங்கை E நூலக நெனசல கருத்திட்டம் “கற்பதற்கான நுழைவு” என்னும் சருவதேச விருதை இலங்கை 286 மில்லியன் ரூபாவுடன் வெற்றி பெற்றுள்ளது (2.2 மில்லியன் ஐ.அ.டொ.)"

- விசேடமாக நாட்டின் கிராமிய மற்றும் தூர இடங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இலகுவில் கணனி மற்றும் இணையத்தளத்துக்கான விரிவான நுழைவை வழங்குவது தொடர்பிலான பணிகள் Bill & Melinda Gates மன்றத்தினால் "கற்பதற்கான நுழைவு" என்னும் சருவதே விருதுடன் சேர்த்து 01 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் 1.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைக்ரோசொவ்ட் மென்பொருளையும் ICTA நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுத்துகின்ற இலங்கை E நூலக நெனசல கருத்திட்டத்திற்கு வழங்கியுள்ளது. இந்த மதிப்பு மிக்க விருதுக்கு உலகளாவிய ரீதியில் பெறப்பட்ட 200 விண்ணப்பப் படிவங்களின் ஊடாகவே இலங்கையின் நெனசல கருதிட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் இந்த தகவல் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது.